விக்கித்தரவு:சுற்றுப்பயணங்கள்

From Wikidata
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Wikidata:Tours and the translation is 98% complete.
விக்கித்தரவுச் சுற்றுப்பயணங்கள்

விக்கித்தரவுச் சுற்றுப்பயணங்களுக்கு வரவேற்கிறோம். சுற்றுப்பயணங்கள் விக்கித்தரவு எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காண்பிக்கும், நமது தரவை எவ்வாறு இதில் சேர்ப்பது என்பதையும் உங்களுக்குக் கற்பிக்கும். விக்கிப்பீடியா போன்ற கட்டுரைகளை மையமாகக் கொண்ட விக்கியில் இருந்து விக்கித்தரவு சற்று வித்தியாசமாக செயல்படுகிறது, எனவே நீங்கள் இதற்கு முன்பு விக்கியைப் பயன்படுத்தியிருந்தாலும் அல்லது வேறொரு விக்கிமீடியத் திட்டத்தில் இருந்து இதற்கு வந்திருந்தாலும், தயவுசெய்து இந்தச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு சுற்றுப்பயணமும் முடிக்க சுமார் 5 நிமிடங்கள் எடுக்கும். நீங்கள் கணினி பதிப்பில் வேலை செய்யப் போகிறீர்கள்.

தயவுசெய்து கவனிக்கவும்:

மேல்விரி பட்டிப் பயன்பாட்டு விதிமுறைகள்
ஐபி எச்சரிக்கை மேல்விரி பட்டி

  • நீங்கள் "Start this tutorial" என்ற பொத்தானைச் சொடுக்குவதன் மூலம், உங்கள் பயனர் கணக்கில் தானியங்கித் திருத்தங்கள் செய்யப்படும். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகத் திருத்தப்பட்ட பக்கங்கள் உண்மையான உருப்படிப் பக்கங்கள் இல்லை என்றாலும், ஒவ்வொருத் திருத்தங்களிலும் பக்க வரலாற்றில் உங்கள் செயல்பாடுகள் பதிவுசெய்யப்படும்.
  • உங்களிடம் விக்கித்தரவில் பயனர் கணக்கு இல்லையென்றாலோ, அல்லது உங்களிடம் ஒரு கணக்கு இருந்தும் புகுபதியாமல் இருந்தாலோ, உங்கள் கணினியின் ஐபி முகவரி, திருத்தம் செய்ததாக பக்க வரலாற்றில் பதிவுச் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்க.
  • உங்கள் ஐபி முகவரியை அனைவரும் பார்க்கும் வகையில் சுற்றுப்பயணத்தில் உள்நுழைய விரும்பவில்லை என்றால், அல்லது எதிர்காலத் திருத்தங்களில் இந்த மேல்விரி பட்டியில் ஐபி எச்சரிக்கைப் பார்ப்பதைத் தடுக்க விரும்பினால், தயவுசெய்து ஒரு கணக்கை உருவாக்கவும் மற்றும்/அல்லது சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் முன் புகுபதியவும்.
  • When editing Wikidata for the first time (or if editing while not logged in), you will encounter the Terms of use pop-up. To prevent seeing this pop-up for future edits, please select the "Do not show this message again" option. To read the terms of use now, before starting a tour, click here.

விக்கித்தரவு:சுற்றுப்பயணங்கள் மீதான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. அனைத்து பின்னூட்டங்களையும் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

விக்கித்தரவு அடிப்படைகள்

விக்கித்தரவு அடிப்படைகள், விக்கித்தரவு எவ்வாறு இயங்குகிறது, அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் கட்டமைப்பின் பல்வேறு பகுதிகளைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

உருப்படிகள்

இந்தச் சுற்றுப்பயணம் விக்கிதரவைத் தொகுப்பதற்கான ஆரம்பநிலைக்கு ஏற்ற அறிமுகத்தை வழங்குகிறது. இது விக்கித்தரவில் உள்ள அறிவைக் குறிக்கும் அடிப்படை அலகுகளான "உருப்படிகளை" உள்ளடக்கியது, மேலும் உங்கள் முதல் உருப்படியைத் தொகுக்க உதவும்.


கூற்றுகள்

இந்த சுற்றுப்பயணத்தில் விக்கித்தரவில் மேம்பட்ட திருத்தம் செய்வது, உருப்படிகளுக்கான கூற்றுகளை எவ்வாறு உருவாக்குவது ஆகியவை அடங்கும். இந்தச் சுற்றுப்பயணம் தொடரில் இரண்டாவது; நீங்கள் ஏற்கனவே உருப்படிகள் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்றால், தயவுசெய்து முதல் சுற்றுப்பயணத்தைச் செய்யவும்.


ஆதாரங்கள்

இந்தச் சுற்றுப்பயணத்தில், விக்கித்தரவில் உயர்தரத் தரவைச் சேர்ப்பதற்கு உதவியாக எப்படி ஆதாரங்களைச் சேர்ப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். ஒரு ஆதாரம் (அல்லது மேற்கோள்) விக்கித்தரவில் ஒரு கூற்றுயின் தோற்றத்தை விவரிக்கிறது.


மேலும் சுற்றுப்பயணங்கள் விரைவில் வரவுள்ளன

இங்கே மேலும் சுற்றுப்பயணங்கள் சேர்க்கப்படுகின்றன, விரைவில் மீண்டும் பார்க்கவும்.





விக்கித்தரவுச் செயல்பாடுகள்

இந்தச் சுற்றுப்பயணங்கள் விக்கிடேட்டாவில் நீங்கள் செய்யக்கூடிய பல்வேறு பொதுவான செயல்பாடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றன, நீங்கள் விக்கித்தரவுக்குப் புதியவராக இருந்தால், அடிப்படைப் பயணங்களை முதலில் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

ஆயமுறை இடங்குறிப்பு

இந்தச் சுற்றுலா இடங்களைப் பற்றிய உருப்படிகளில் ஆயங்களைச் சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


படிமங்கள்

இந்தச் சுற்றுலா உருப்படிகளில் படிமங்களை சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


தொடங்கிய நாள்

இந்தச் சுற்றுலா உருப்படிகளில் தொடங்கிய நாளை சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


அதிகாரபூர்வ இணையத்தளம்

இந்தச் சுற்றுலா உருப்படிகளில் அதிகாரப்பூர்வ இணையதளத்தைச் சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


நிர்வாகப் பகுதி

இந்தச் சுற்றுலா இடங்களைப் பற்றிய உருப்படிகளில் நிர்வாகப் பகுதியைச் சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


மேலும் சுற்றுப்பயணங்கள் விரைவில் வரவுள்ளன

இங்கே மேலும் சுற்றுப்பயணங்கள் சேர்க்கப்படுகின்றன, விரைவில் மீண்டும் பார்க்கவும்.


புதிய சுற்றுப்பயணங்களை உருவாக்கி கோருதல்

புதிய சுற்றுப்பயணத்தைக் கோர அல்லது சுற்றுப்பயணங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.