Shortcuts: WD:LD, WD:LEX

விக்கித்தரவு:சொற்பொருளித் தரவு

From Wikidata
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Wikidata:Lexicographical data and the translation is 70% complete.
Outdated translations are marked like this.
a logo based on ama/𒂼 (L1) in Wikimedia colors

சொற்பொருளித்தரவுத் திட்டப்பக்கத்திற்கு வருக!

சொற்பொருளித்தரவு என்றால் என்ன?

விக்கித்தரவுத் திட்டம் 2012 ஆம் தொடங்கியது. அப்பொழுது 'பன்மொழி கருத்துரு' அடிப்படையில் உருப்படியானது(Q), மொழிகளுக்கு இடையேயான தலைப்புகளில் மட்டும் தொடர்புகளை ஏற்படுத்தின. அத்தொடர்பில், 'சொற்பொருள்' தொடர்பில்லை. 2018 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு சொல்லின் பொருட்களும், சொற்றொடர்களும், வாக்கியங்களும், ஊடகங்களும், பிற மொழிச்சொற்களோடு இணைக்கப்பட்டு, விக்கித்தரவில் புதிய முறையில் சேமிக்கப்பட்டன. அப்புதிய முறைமையானது, சொற்பொருளன்கள்(Lexemes - L), படிவங்கள் (Forms = F), உணர்வுகள்/கருப்பொருட்கள்(Senses = S) ஆகிய உருபொருட்களைக் கொண்டுள்ளன. இத்தரவு மாதிரிகளை, அதன் ஆவணப்பக்கத்தில் கற்கலாம்

குறிப்பிட்ட தரவடிவம் பெற்ற சொற்களானது, நேரடியாக அதன் கருத்துருக்களுடன் இணைக்கப்படுகின்றன. இவ்விணைப்பால், பங்களிப்பாளர் பிற மொழிச்சொற்களுடன் துல்லியமாக இணைக்கலாம். இவ்வாறு இணைக்கப்பட்ட, அனைத்து மொழிச்சொற்களும், விக்கிமீடியத் திட்டங்களிடையே பலமுறை பயன்படுத்துவதற்கான நுட்பம் அமைக்கப்படுகிறது. இந்நுட்பத்தினை விக்கித்தரவின் கருவிகளும், வினவல்களும், அனைத்து விக்கித்தரவு உருப்படிகளைப் போலவே கையாளுகின்றன. இதனால் அனைத்து மொழி விக்சனரிகளின் வளர்ச்சியும் ஏதுவாகும்.

கால எல்லை

  • 2012: விக்கித்தரவில், சொற்பொருளித் தரவினை இணைப்பது குறித்த முதற்கட்ட கலந்துரையாடல்கள்.
  • 2013–2016: பல கட்ட கலந்துரையாடல்கள் - பங்களிப்பாளர்கள்+கணிய நிரலர்கள் - அதனால் தோன்றும் வளர்ச்சித் திட்டப் பதிப்புகள்
  • 2016: சொற்பொருளித்தரவுக்கான வளர்ச்சித்திட்டத் தொடக்கம்
  • 2017: விக்கிவடிவ சொற்பொருளன்களின் (Wikibase/Lexeme) தொடர்வளர்ச்சி, விக்சனரிக்கான கருவிகளின் தோற்றம் (இணைய இணைப்புகள்)
  • மே 23, 2018: சொற்பொருளித் தரவுப் பங்களிப்புக்கான, முதற்பதிப்பு வெளியீடு✓ ஆயிற்று
  • அக்டோபர் 16, 2018: வினவல் சேவையில் (Query Service) சொற்பொருளித்தரவினை இணைவித்து ஏதுவாக்கல் ✓ ஆயிற்று
  • அக்டோபர் 18, 2018: கருப்பொருட்கள்/உணர்வுகள் (Senses) வசதி ஏதுவாக்கல் ✓ ஆயிற்று
  • 2018–2019: மறுசெய்கையால், இத்திட்டக்கூறுகளைத் தோற்றுவித்தலும், பராமரிப்பும் செய்தல்

பயனுள்ள இணைப்புகள்